2019ல் அடியெடுத்து வைக்கும் மகர ராசி நேயர்களே, இந்த வருடம் முக்கிய கிரகங்களான குரு பகவான் 11-ம் வீட்டிலும், சனி பகவான் 12-ம் வீட்டிலும் சஞ்சரித்துள்ளதால் இது வரை தடைபட்டு வந்த சுப காரியங்கள் இனிதே நடைபெறும். இந்த புத்தாண்டு ஏழரை சனியோடு தொடங்குகிறதே என்ற அச்சம் வேண்டாம். உங்கள் ராசியின் அதிபதியே சனி தான் அப்படி இருக்க அவர் எப்படி உங்களுக்கு கெடுதலை செய்வார். நீங்கள் கடுமையான உழைப்பாளி என்று அனைவரும் அறிந்த ஒன்று, முன்பு இருந்ததை விட இப்போது கொஞ்சம் கூடுதலாக உழைக்க வேண்டி வரும் அவ்வளவு தான், மற்றபடி எந்த தொந்தரவும் இல்லை. இந்த ஆண்டு நீங்கள் எடுத்து வைக்க போகும் ஒவ்வொரு அடியும் உங்கள் எதிர்கால வாழ்க்கையின் அஸ்திவாரமாக இருக்கும். மனதினில் தர்ம சிந்தனைகளும், தியாக உணர்வுகளுமே அதிக அளவில் இடம் பிடிக்கும். அடுத்தவர்களின் நலனுக்காக கடுமையாக உழைப்பினை வெளிப்படுத்த வேண்டியிருக்கும். எடுத்த வேலையை முடிப்பதற்கு நிறைய அலைச்சலை சந்திக்க நேரிடும். குடும்ப விஷயங்களில் உங்களது பங்களிப்பு மிகவும் குறைவாக இருந்து வரும். இக்கட்டான நேரத்தில் அதிகம் பேசாமல் இருப்பது நல்லது. உடன்பிறந்தோர் உங்களுக்கு உதவி செய்ய தயாராக இருப்பார்கள். உறவினர்களால் குடும்பத்தில் செலவுகள் அதிகரிக்கும். குலதெய்வ வழிபாடு எல்லா வகையிலும் நன்மையை தரும். குடும்பத்துடன் சென்று நீண்ட நாள் பிராத்தனையை நிறைவேற்றவும். பணம் பல வழிகளில் வந்து சேரும். குடும்பத்தில் சுப செலவுகள் அதிகமாக ஏற்படும். கடன் வாங்கவோ, கொடுக்கவோ வேண்டாம், அதனால் பல சிக்கல் வரும். வாகன பயணத்தில் கவனமுடன் செயல்படவும். வழக்கு தொடர்பான விவகாரங்களில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். உங்களை சுற்றிலும் ஒரு நண்பர் கூட்டம் இருக்கும். குடும்பத்தை பொறுத்தவரை கணவன் மனைவி இருவரும் வீண் வாக்குவாதங்கள் ஏற்படாதவாறு தங்கள் பேச்சுக்கள் குறைத்து கொண்டால் நிம்மதி உண்டாகும். வீட்டிற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்க முடியும். தெய்வ பலத்தால் அனைத்தும் சுலபமாக கிடைக்கும். உத்யோகத்தில் சிக்கலான விஷயங்களை கூட எளிதில் தீர்க்க முடியும். உத்யோகத்தில் உங்களுக்கு எதிராக சிலர் செயல்பட வாய்ப்புண்டு, இருப்பினும் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கவும். தொழில், வியாபாரத்தில் பெரியளவில் முதலீடு செய்ய வேண்டாம். தொழில், வியாபாரத்தில் பண வரவு கூடும். மறைமுக எதிர்ப்புகளை எதிர்த்து மற்றவர்களுக்கு தகுந்த பாடம் கற்பிக்கும் ஆண்டாக இந்த புத்தாண்டு அமையும்.
பரிகாரம் : இந்த வருடம் முழுவதும் சாஸ்தாவை வணங்கி வழிபடவும்.
முக்கிய குறிப்பு : இந்த 2019ல் மாதம் தோறும் வரும் சந்திராஷ்டம தினத்தில் மட்டும் சிறிது எச்சரிக்கையாக இருக்கவும்.
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831